Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மாநில அரசு பரபரப்பு விளக்கம்….!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மஹாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ராஜேஷ் தோப்பிடம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் “மாநிலத்தில் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை ஏற்படும்போது மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. ஆகவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

Categories

Tech |