Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது விஜய் சேதுபதியின் “கடைசி விவசாயி” ட்ரெய்லர் ….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும்  “கடைசி விவசாயி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் “கடைசி விவசாயி”  திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை அளவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் “கடைசி விவசாயி” படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் . கலை இயக்குனர் தொட்டா தரணி. ட்ரைபல் ஆர்ட்ஸ் சமீர் பரத் ராமுடன் சேர்ந்து நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தை  தயாரித்துள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும்  “கடைசி விவசாயி” படத்தின் ட்ரெய்லர் கீழே உள்ளது.

 

Categories

Tech |