Categories
உலக செய்திகள்

2 டோஸ்ஸையும் போட்டவங்க எப்போ “பூஸ்டர் தடுப்பூசி” போடணும்னு தெரியுமா…? இதோ… தகவல் வெளியிட்ட ஆணையம்….!!

பிரான்ஸ் நாட்டின் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் எப்போது பூஸ்டர் டோஸ்ஸை போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகச் எடுத்துக்கொண்ட பெரியவர்கள் மட்டும் அடுத்ததாக பூஸ்டர் டோஸ்ஸை 5 மாதங்கள் கழித்து செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உயர் சுகாதார ஆணையம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் அடுத்த 3 மாதங்களில் பூஸ்டர் டோஸ்ஸை போடுவதற்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் உயர் சுகாதார ஆணையம் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பருவத்தினர்கள் வேறு எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரை குறித்து பிரான்ஸ் அரசாங்கம் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Categories

Tech |