மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தினுடைய இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட் மற்றும் குளோபல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கின்றன. இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் தயாரித்துள்ளனர். பிக்பாஸ்-ன் மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் ரவிக்குமார் மற்றும் யோகிபாபு இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து ஒரு ரோபோட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வருகிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரோமோஷனல் பாடலான பொம்மை பொம்மை பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இந்த பாடலை அறிவு மற்றும் சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.