Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவனம் இல்லாமல்…. உயிரிழந்த 40 மலைமாடுகள்…. விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை….!!

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் செய்யும் தேனி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை துறையின் சார்பில் கருவேப்பிலை நாற்று வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு தடுப்பூசி போதிய அளவில் கிடைக்க வேண்டும், கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் இதுவரை 40 மாடுகள் உயிரிழந்துள்ளது. எனவே தீவன தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனைதொடர்ந்து மலை மாடுகளுக்கு மேய்ச்சல் சீட் அனுமதி சீட்டு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அனுமதி சீட்டு வழங்காவிடில் மலைமாடுகளை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒப்படைப்போம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இயற்கை விவசாயம் செய்யும் பரப்பளவு அதிகரிக்க வேண்டும், மேகமலை பகுதிகளில் பல தலைமுறையாக விவசாயம் செய்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நீர்நிலைகளில் பனை விதைகள் நட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இதனை கேட்டறிந்த ஆட்சியர் முரளிதரன் பேசும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து விரைவில் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார். மேலும் மாவட்டத்தில் உரம், தீவனம் விற்பனை ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை முறையாக செயல்படாத 21 கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் வித்தியா, வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |