நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினரோடு லண்டனுக்குச் செனறிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.