Categories
அரசியல் மாநில செய்திகள்

பண மோசடி வழக்கு…. எடப்பாடியின் உதவியாளர் கைது…!!!!

எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போது அவரது தனி உதவியாளராக இருந்தவர் மணி. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர். அந்த சமயத்தில் மணி அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் மணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மணியின் நண்பர் செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

மணியும் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். செல்வகுமார் எடப்பாடியார் பேரவை என்ற அமைப்பை நிறுவி தன்னை அவருடன் ஒரு நெருங்கிய நட்புள்ளவராக காட்டிக்கொண்டுள்ளார். இந்த செல்வகுமாரின் மூலமாக தான் பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மணி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |