வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நான்காவது முறையாக இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இவ்வாறு தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவதால் எதாவது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்று மக்களிடையே அச்சம் நிலவி வந்த நிலையில், லேசான நில அதிர்வால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.