புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் தனது கடையில் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அந்நேரம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சக்தியை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.