சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் இரண்டு அரசு பேருந்துகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் இரண்டு பேருந்துகளில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.