மர்மமான முறையில் வௌவால்கள் இறந்து கிடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காட்டில் இருக்கும் மரங்களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு உள்ளிட்ட விவசாயப் பகுதிகளில் வௌவால்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டது. இந்நிலையில் 2 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வௌவால்கள் இறந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வௌவால்கள் இறந்திருந்தால் பிற கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் களக்காடு வனப்பகுதியில் இருக்கும் பல வன விலங்குகளுக்கும் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் வௌவால்களை பரிசோதனை செய்து நோய் தாக்குதல் இருந்தால் அதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.