பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொது முடக்கம் அமலுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக 91,608 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.
ஆனால் பிரான்ஸ் அரசாங்கமோ எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் மூடல்கள், விடுமுறை நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் ஜானாதிபதி மாக்ரோன் தலைமையிலான கூட்டம் கொரோனா நிலைமை குறித்தும், ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் வருகின்ற திங்கள்கிழமை அன்று ஆலோசனை நடத்தும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.