Categories
மாநில செய்திகள்

ஜனவரி 3 முதல்…. “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் பொழுது சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு முழு நேர வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 28 சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் முழுநேரமும் இயங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ்  ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் பள்ளிகளை முழுநேரம் இயக்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு வரும் 28-ம் தேதி விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் டிசம்பர் 28-ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் நேரடி வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Categories

Tech |