தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தின் நடந்துள்ளது. அதன்மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 16-வது முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்தநிலையில், இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.