சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வேல்நகர் பகுதியில் சதீஷ்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஜூலை மாதம் யாருக்கும் தெரியாமல் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சதீஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியுள்ளார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். மேலும் வாலிபரின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.