Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன ‘மகாராணியார்’ முகத்தில் சிரிப்பையே காணோம்!… என்ன காரணம்..?!!!!

நேற்று மக்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறிய பிரித்தானிய மகாராணியார் முகத்தில் எள்ளளவு கூட சிரிப்பு எட்டி பார்க்கவில்லை.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் மற்றும் மறைந்த கணவர் பிலிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது கொரோனா வைரசால் பிரித்தானிய மக்களின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெரிய தாக்கமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவால் சிலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கின்றனர் என்பதை என்னால் உணர முடிகிறது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய மறைந்த கணவர் பிலிப் பற்றி பேசிய மகாராணி அவருடைய ஆர்வம், சேவை உணர்வு, குறும்புத்தனம் ஆகியவற்றை மறக்கவே முடியாத மனநிலையில் நானும் எனது குடும்பத்தினரும் உள்ளோம். இருப்பினும் பிலிப் இந்த கிறிஸ்துமஸை நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று தான் விரும்புவார். தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸை விருப்பப்படி கொண்டாட முடியாது என்றாலும் பரிசுகளை வழங்குவது, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது உள்ளிட்ட மகிழ்ச்சியான விஷயங்களை நம்மால் அனுபவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிலிப் மறைவால் இந்த ஆண்டு எனது குடும்பத்தினருக்கும் எனக்கும் வழக்கமான சிரிப்பு இல்லாமல் போகலாம். ஆனால் நாங்கள் அதை எங்களது குழந்தைகளிடம் ( பேரன், பேத்திகள் ) பார்க்க முடியும் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மகாராணி.

Categories

Tech |