Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் சட்ட விரோத விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. மீண்டும் 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சப்பையாபுரம் பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜமாணிக்கம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |