Categories
மாநில செய்திகள்

என்னடா இது..! வாட்ஸ்அப் அட்மினுக்கு வந்த சோதனை…. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில். கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் துவக்கி அட்மினாக உள்ளேன். இந்த குரூப்பில் ஒருவர் இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரச்சினைக்குரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை என்னுடைய வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே என்னுடைய மீதான வழக்கு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது. ஆனால் பதிவுகளை முறைப்படுத்தவும், மாற்றியமைக்க முடியாது. எனவே உறுப்பினரின் தவறுகளுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது. மனுதாரர் அந்த குரூப்பின் அட்மிட் மட்டுமே என்பது உறுதியாக இருந்தால் வழக்கின் இறுதி அறிக்கையில் அவருடைய பெயரை நீக்க வேண்டும். மாறாக அவர் மீது வழக்கு நிரூபிக்க போதுமான ஆவணங்கள் கிடைத்தால் சேர்க்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |