Categories
மாநில செய்திகள்

மறக்கமுடியுமா…?? “இன்னமும் கரையோரம் ஒலிக்கும் கதறல்” 17-வது சுனாமி நினைவு தினம் இன்று…!!!!

இன்று சுனாமியின் 17 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இதே நாளில்தான் சுனாமியின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தது. இசைக்கத் தெரிந்த ஆலைகளுக்கு இம்சிக்கவும் தெரியும் என்று உணர்த்திய வருடம் 2004. 17 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி கடலோரப் பகுதிகளுக்குள் புகுந்தது.

திடீரென தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் அச்சமடைந்த மக்களுக்கு உலகம் அழிகிறதோ என்று எண்ணும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமி கோரத் தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டுமே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அன்று தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல் 16 வருடங்களுக்குப் பிறகு இன்னமும் கரையோரம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து காலத்திடம் இருக்கிறது.

இருப்பினும் அந்த காலத்தால் அழிக்க முடியாத வடுவை சுனாமி ஏற்படுத்தி சென்றுவிட்டது. இனியும் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பது அனைவருடைய வேண்டுதலாக இருக்கிறது. இந்தநிலையில்  இன்று சுனாமியில் இறந்தவர்களுக்கு கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |