Categories
தேசிய செய்திகள்

“ஒரு மணி நேரத்திற்கு 4.60 லட்சம்”…. அள்ளிச் சென்ற திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக டிக்கெட்டுக்கு பயங்கரமா டிமன்ட் உருவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஜனவரி மாதத்திற்கான 4,60,000 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த டிக்கெட் பதிவு தொடங்கிய உடனே 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் நுழைந்தனர்.

அதன் பிறகு 55 நிமிடத்துக்குள் அனைத்து டிக்கெட் பதிவு சுகமாக விற்று தீர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 1, 13 முதல் 22 தேதி வரை தினசரி 20,000 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஜனவரி 2, 23 முதல் 31ஆம் தேதி வரை தினசரி 12,000 என்ற விகிதத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 1,2,13,22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆன்லைன் தரிசனத்திற்காக 5500 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து டிக்கெட்டுகளும் மிக விரைவாக விற்று தீர்ந்துவிட்டது.

Categories

Tech |