Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம என்னால வாழ முடியல அப்பா”…. சமாதியில் வாலிபரின் செயல்…. பெரும் சோகம்…!!!

தந்தை சமாதியான இடத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தை ரவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீராத கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பெங்களூரில் குடியேறினர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு அரவிந்தன் வந்துள்ளார்.

இந்த நிலையில் அரவிந்தன் தனது தந்தை சமாதியான இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |