போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் வசூலிக்கும் ஸ்பாட் ஃபைன் முறையில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அதனை கையடக்க இயந்திரத்தில் வரவு வைக்காத வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனை பதிவு செய்திருக்கும் ஒருவர் வசூலித்த பணத்தை முறைப்படி கணக்கு காட்டவில்லை என்று கூறி உதவி ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் போலீசார் ஹெல்மெட் அணியாதது,இன்சுரன்ஸ் புதிப்பிக்கப்படாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு கட்டணம் வசூலித்து இயந்திரத்தில் பதிவேற்றி ரசீது வழங்குவது வழக்கம் கட்டணம் வசூலிக்கும் அனைவர் விவரங்களையும் கணக்கில் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்வதில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.