மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில் குன்னூர் விபத்தில் இறந்த வருண் சிங் மரணத்தோடு பலநாட்கள் சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தி நம்மை விட்டு பிரிந்து சென்றார். வருண் சிங்கிற்கு வருங்கால தலைமுறையினர் மீது பெரும் அக்கறை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.