பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். அதன்படி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியது, கொரோனா புதிய உருமாற்றத்தை நாம் அனைவருடைய கூட்டு முயற்சியால் விழ்த்தவேண்டும். இதுவரை இந்தியாவில் 140 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா புதிய உருவமான ஒமைக்ரான் நமது கதவை தட்ட தொடங்கி உள்ளதால் சர்வதேச பெரும்தொற்றை வீழ்த்த நாம் அனைவரும் ஒருங்கிணைத்து முயற்சி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உந்து சக்தியாக இருந்தார். அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்த போதும் தனது அடித்தளத்தை எப்போதும் மறக்கவில்லை. மேலும் எதில் நீங்கள் பண்ணியாச்சு கிறீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.