Categories
தேசிய செய்திகள்

சனிலியோன் அபாச குதாட்டம்…. எதிர்ப்பு தெரிவித்த மதுரா பூஜாரிகள்….!!

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பல்வேறு பாடல்களில் ஆபாசமாக நடனமாடி வருகிறார். அதன்படி சரிகம மியூசிக் என்ற நிறுவனம் அதுபன் என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் இசை வீடியோவை வெளியிட்டது. இந்தப் பாடலை பாலிவுட் நடிகை கனிகா கபூர் மற்றும் பாடகர் அரிந்தம் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு சன்னிலியோன் நடனமாடியுள்ளார். இந்தப்பாடல் ஆபாசமானதாகவும், மன உணர்வுகளை புண்படுத்த கூடிய வகையிலும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சேர்ந்த கோயில் பூஜாரிகள் சன்னி லியோனின் வீடியோ ஆல்பத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விருந்தாவன் நிறுவனத்தை சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகாராஜ் கூறியது, பாலிவுட் நடிகை சன்னிலியோன் ‘மதுபன் மே ராதிகா நாச்சே’ என்ற பாடலில் மத உணர்வுகளை புண்படுத்த கூடியவகையில் ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் 1960-ஆம் ஆண்டு கோஹினுர் திரைப்படத்திற்காக முகமது ரபியால் பாடப்பட்டது. தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து மாநில அரசு சன்னிலியோன் மற்றும் அவரது குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆபாச காட்சியை நீக்க வேண்டும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி இல்லையென்றால் இந்தியாவில் இந்த ஆல்பத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். அதனைப்போலவே அகில பாரதிய தீர்த்த பூஜாரிகள் மகாசபாவின் தேசிய தலைவர் மகேஷ் பதக்கும் சன்னி லியோனின் நடன வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |