Categories
Uncategorized உலக செய்திகள்

“இங்கிலாந்து மகாராணி எலிசபெத்”…. நேரில் சந்தித்த ஓமன் மன்னர்….!!!

ஓமன்-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து நல்லுறவு நீடித்து வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சேட் தனது மனைவி சயிதா அஹத் பிந்த் அப்துல்லா பின் ஹமத் அல் புசைதியாவுடன் இங்கிலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் அவர் இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் தொடர்பாக பேசப்பட்டது. அதன்பின் இருவரும் பிரதேச மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின்போது ஓமன் துணை பிரதமரான சயித் ஷிகாப்பின் தாரிக் அல் சேட், கலாசாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி சயித் தயாஜின் பின் ஹைதன் அல் சேட், வெளியுறவு மந்திரி சட்யிஹ் பதர் பின் ஹமத் அல் புசைதி, இங்கிலாந்து நாட்டுக்கான ஓமன் தூதர் ஷேக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா அல் ஹினானி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதன்பின் ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சேட் தனது அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து மஸ்கட்டிற்கு புறப்பட்டார்.

Categories

Tech |