Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…. டிச 31-ம் தேதி முதல் மீண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் புக்கிங் டிக்கெட் முன்பதிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணையவழி சேவை மூலமாக காணிக்கை செலுத்தும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆன்லைன் காணிக்கை செலுத்துவதற்கான QR code பலகை சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்பதிவு அடிப்படையில் தினமும் 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் மண்டல பூஜையின் முக்கியமான நிகழ்வாக தங்க அங்கி பல்லக்கு தென்காசி, செங்கோட்டை வழியே நேற்று பம்பை கணபதி கோவில் வந்தடைந்தது.

இதனையடுத்து அங்கியானது தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு தங்கி அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதன்பின் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோவில் திறக்கப்படும். அதன்பின்  31-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |