தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வேகம் எடுத்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முப்பத்தி நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.