Categories
தேசிய செய்திகள்

“திருப்பதி மலைப்பாதை”…. 4-வழி சாலையாக மாற்றப்படும்…. தேவஸ்தான அதிகாரி அதிரடி தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கார், வேன் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். இதனிடையில் வேகமாக வரக்கூடிய வாகனங்களால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் நேரம் குறிக்கப்பட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.

மலைப் பாதையில் வேகமாக சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக திருமலைக்கு வரும் வாகனங்கள் ஸ்பீடுகன் மூலமாக கண்டறியப்பட்டு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையால் சேதமடைந்த மலைப்பாதையை சீரமைப்பது தொடர்பாக தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகள், என்ஜினியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “பலத்த மழையால் சேதமடைந்த மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை பணியை விரைவாக முடிக்க வேண்டும்.

அலிபிரியில் இருந்து திருமலைக்கு போகும் சேதமடைந்த மலைப்பாதை தொடர்பாக தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அவர்கள் ஜனவரி 10-ந்தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கின்றனர். அதன்பின் அமிர்தா பல்கலைக் கழகத்துடன் அந்த ஆய்வறிக்கை ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் அறிவுறுத்தலின்படி திருமலையிலிருந்து அலிப்பிரிக்கு வரும் சாலையை 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொகாலிமெட்டில் இருந்து சிஎன்சி வரை 4 வழி சாலையாக விரிவுபடுத்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக” தெரிவித்தார்.

Categories

Tech |