Categories
மாநில செய்திகள்

தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்….. அய்யோ ஆண்டவா….!!!!

பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து அதனுடன் தூங்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், பரவலாய் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்ட காரணத்தினால் தாய் மூக்காயி மட்டும் அவரை வளர்த்து வந்துள்ளார். இடையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தாய் மூக்காயி உயிரிழந்துவிட்டார். இதை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்பட்ட பாலமுருகன் தாயை அடக்கம் செய்த சுடுகாடு பகுதியில் அதிகம் நடனமாடியுள்ளார். மழை பெய்தபோது தாய் புதைக்கப்பட்ட சமாதியை பிளக்ஸ் பேனரை வைத்து மூடியதுடன் மட்டுமல்லாமல் பல நாட்கள் சமாதி மேலே தூக்கியும் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை உறவினர் ஒருவர் வீட்டுக்கு உணவு கொடுக்க சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது . அதை அவரிடம் கேட்டபோது ஒன்றுமில்லை என்று கூறி வெளியில் போக சொல்லியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சடலம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 87  நாட்களாக சிறிது சிறிதாக தோண்டி சடலத்தை குப்பை வண்டியில் வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |