சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்தும் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தொடர்ந்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுப்ரமணியன், துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர்.