இந்த ஆண்டில் கேஸ் சிலிண்டர் விலை கடும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களுக்கு தள்ளுபடி வழங்குவது குறித்த அறிவிப்பை பேடிஎம்(Paytm) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் பேடிஎம் வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் போது 2700 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும்.கேஷ்பேக் என்றால் குறிப்பிட்ட தொகை உங்களிடம் திருப்பி கொடுக்கப்படும். இந்த சலுகையை பெற பேடிஎம் மொபைல் ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும். எதற்காக பேடிஎம் நிறுவனம் “3 Pay 2700 cashback” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மூன்று வெவ்வேறு மாதங்களில் பேடிஎம் ஆப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்தால் இந்த சலுகையை பெறலாம்.இதன் மூலம் முதன்முறையாக கியாஸ் சிலிண்டர் புக் செய்யும்போது 900 ரூபாய் கேஷ் பேக் சலுகை கிடைக்கும். அதன் பிறகு அடுத்த இரண்டு மாதங்களில் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை உங்களுக்கு வழங்கப்படும். ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்யும்போது 5 ஆயிரம் கேஷ்பேக் புள்ளிகள் வரை கிடைக்கும். Indane, HP Gas, Bharatgas ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் கேஸ் சிலிண்டர் வாங்குவோர் பேடிஎம் ‘3 Pay 2700 Cashback’ சலுகையை பெறலாம்.