குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருபை நகர் பகுதியில் ஏகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது நண்பருடன் கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.