Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தூக்கில் தொங்கிய வேன் டிரைவர்…. உறவினர்கள் போராட்டம்….!!

தனியார் மில் வளாகத்தில் வேன் டிரைவர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் முதலக்கம்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் தனலக்ஷ்மி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற வேல்முருகன் மில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மில் ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற க.விலக்கு காவல்துறையினர் வேல்முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவலறிந்த வேல்முருகனின் உறவினர்கள் மில்லிற்கு சென்று வேல்முருகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |