Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. நாளை முதல் மீண்டும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதித்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை முதல் இங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த இருக்கிறது. மேலும் புதுவருடப்பிறப்பு தினத்தில் நடைபெறும் இரவு நேர இசை, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் முழுமையாக தடை என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி உணவகங்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் 50% இருக்கைகள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. இங்கு பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கானது 10 தினங்கள் வரை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறையை பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Categories

Tech |