நடிகர் மோகன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். இதனையடுத்து, நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இவரை ரசிகர்கள் ”மைக் மோகன்” எனவும் அழைத்தார்கள். புகழின் உச்சத்தில் இருந்த இவருக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இந்நிலையில், இவர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். மேலும், விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இவரின் ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.