நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் நேற்று 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 52 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.