கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “எத்தனையோ முறை நான் கோவைக்கு வந்திருந்தாலும், இத்தனை எழுச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை.
கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயமுத்தூருக்கு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்” என தெரிவித்துள்ளார்.