தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குக் குளிர் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 19 முதல் 21 ஆக இருக்கும் என்றும் கிழக்கு காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் குளிர் அதிகமாகும் என்றும் வளிமண்டலத்தில் இருந்து வெப்பம் வெளியேற விடாமல் மேகங்கள் மறைத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.