பிரதமர் மோடி நாளை கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியில் 54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் 356 கிலோ மீட்டர் நீளம் மற்றும் ஆண்டுக்கு 3.45 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை இந்த திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.