சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வதாக கூறப்படுகிறது. இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில்கேஸ் சிலிண்டர்களுக்கு சிறப்பு சலுகையை Paytm அறிவித்துள்ளது. அதன்படி “3 Pay 2700 Cashback” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு 3 வெவ்வேறு மாதஙக்ளில் பேடிஎம் ஆப் மூலம் புக் செய்ய வேண்டும். முதல்முறை புக் செய்யும்போது ரூ.900 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.