சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கம் முனையத்தில் இருந்து சீனாவுக்கு வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொண்ட 13 பெட்டிகள் ஏற்றுமதி செய்ய இருந்தது. இந்தப் பெட்டிகள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் இந்தியாவில் அழிந்து வரக் கூடிய பாதுகாக்கப்பட்ட ‘பக்பர்’ மீன்வகை குஞ்சுகள் இருந்தது. இந்த 13 பெட்டிகளிலும் 60,000 மீன்குஞ்சுகள் இருந்தது.
இந்த வகை மீன்கள் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சென்னை வழியாக சீனாவுக்கு அனுப்ப முயன்றுள்ளது. சுங்க இலாகா அதிகாரிகள் அந்த மீன் குஞ்சுகளை கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கிண்டி குழந்தைகள் பூங்கா அதிகாரிகள் அவற்றை ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பார்சலில் இந்த முகவரிக்கு சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை செய்ய சென்றபோது அவை போலியானது என்று தெரியவந்தது. இதுபற்றி இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.