தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைளில் ஒருவர் அனுஷ்கா செட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய சினிமா உலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று படத்தில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா செட்டி ஹீரோயினியாக புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த நவம்பர் 7ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. அன்று அவர் பிறந்தநாள் என்பது குறிபிடத்தக்கது.
இவர் நடித்த புதிய படத்தை தெலுங்கு திரை உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரித்துள்ளார். இதற்கு முன்னதாக யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா நடித்த மிர்ச்சி மற்றும் பாகமதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைப்போலவே ஹாட்ரிக் ஹிட் அடிக்க வேண்டும் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார்.