சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க தயாராக இருந்தார்கள். பல்வேறு காரணங்கள் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதால் பெண்கள் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியும் என்று சொன்ன கேரள காவல்துறை இந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்தது.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் பாத்திமா பிந்து உள்ளிட்ட பெண்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு தரக் கோரி தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது ஏனெனில், சபரிமலை விவகாரத்தில் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்றும், பெண்கள் பொறுமை காக்குமாறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.