Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கே சென்று “சிறார்களுக்கு தடுப்பூசி”….. சுகாதாரத்துறை தகவல்…!!!!

ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பெயரில், ஜனவரி 3-ம் தேதி முதல் 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜன 3-ம் தேதி போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |