மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை கவனித்துக் கொள்ள ஏதுவாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.