Categories
தேசிய செய்திகள்

JUST IN: திருப்பதியில் இன்று காலை 9 மணி முதல்…. பக்தர்களே முந்துங்கள்…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |