நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் 2020-21 இல் நடந்த பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு டிசம்பர் 23 இல் வெளியானது. இதில் 51 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் மனமுடைந்த 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.