ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சில நாட்களாக பிரான்சில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 88 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் சுகாதார நிபுணர்கள் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர். எனவே அதிபர் மேக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.