சென்னையில் இதுவரை இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை பள்ளி, கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? முகக் கவசம் அணிகிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.